யாழ்.மிருசுவில் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பளை பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த டிப்பர் வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டவேளை யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற டிப்பருடன் நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.