பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம், எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் நாடுமுழுவதும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க சுகாதார அமைச்சால் முடியவில்லை என்று சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
கோரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகள், தொற்று நோய்கள் மீதான தடுப்பு முயற்சிகள் மற்றும் தேர்தல் தொடர்பான கடமைகள் ஆகியவற்றிலிருந்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை முதல் விலகுவர் என்று பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.