பிரபல நடிகர் தாடி பாலாஜி தனது மகளுக்கு எந்த விதத்திலும் உதவாத நிலையில் அவர் மனைவி நித்யா பழையபடி வேலைக்குப் போகலாம்னு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. இவர்கள் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து நடனமாடிய போதுதான் இவர்களுக்கிடையில் இருந்த குடும்பப் பிரச்னை வெளியுலகத்துக்குத் தெரியவந்தது.
தொடர்ந்து பொலிஸ் புகார், நீதிமன்றம் என இவர்களது வீட்டு விவகாரம் பொதுவெளிக்கு வந்ததைத் தொடர்ந்து கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், `பிக் பாஸ்’ இரண்டாவது சீசனில் இருவருமே போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல, பழையபடி இவர்களின் குடும்ப விவகாரம் மீடியாவில் அடிபட்டது. அந்த சீசனின் இறுதியில் கமல்ஹாசன் முன்னிலையில் இருவரும் மனம்மாறி சேர்ந்துவிட்டதாகக் காட்டப்பட்டது.
ஆனால், இன்றுவரை பாலாஜி தனியாகவும் நித்யா தன் மகள் போஷிகாவுடன் தனியாகவும்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

பாலாஜியைப் பிரிந்ததிலிருந்து கடந்த சில ஆண்டுகளாக மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார் நித்யா. கொரோனாவால், இப்போது பள்ளியைத் திறக்கமுடியாததால், பள்ளியைத் தொடர்ந்து நடத்த இயலாத சூழலில் இருக்கிறாராம்.
ஐ.டி துறையில் பெரிய கம்பெனியிலும் பிறகு பிரபலமான ஒரு மருத்துவமனையில் ஹெச்.ஆர் அதிகாரியா இருந்தவர் நித்யா. பாலாஜியைக் கல்யாணம் செய்த பிறகு அந்த வேலையிலிருந்து விலகிட்டார்.

குடும்ப வாழ்க்கையில பிரச்னை வந்து கணவரைப் பிரிந்து இருந்தாலும், சொந்தக் காலில் நிற்கணும்னு நினைக்கிறாங்க. அவங்க வழக்கு எப்ப எப்படி முடியும்னு தெரியல. முடிஞ்சாலும் ஜீவனாம்சமா பெருசா எதுவும் கிடைக்குமான்னும் தெரியல. ஏன்னா மகள் போஷிகாவுக்குச் செய்யச் சொன்ன சில விடயங்களையே பாலாஜி செய்யலைன்னு சொல்லிட்டிருந்தாங்க.
அதனால் பழைய வேலைக்கே செல்ல நித்யா தைரியமாக முடிவெடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கூறியுள்ளனர்

நித்யா முன்பு பணிபுரிந்த நிறுவனத்திலிருந்தே அழைப்பு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.