அமெரிக்காவில் ஏற்கனவே கருப்பினத்தவர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், கருப்பினப்பெண் ஒருவர் வெள்ளையினப் பெண்ணொருவரால் கோரமாக தாக்கப்பட்டுள்ளார்.


செவிலியரான Yasmine Jackson என்பவரை, Angela Bonell(22) என்ற வெள்ளையினப் பெண் முகத்தில் ஏழு முறை கத்தியால் குத்தியுள்ளார்.
லாஸ் வேகாசிலுள்ள தனது வீட்டின் அருகிலேயே தன்னைத் துரத்திய வெள்ளையினப்பெண் ஒருவர், தொடர்ந்து தன்னை இன ரீதியாக விமர்சித்ததாகவும், துரத்தி துரத்தி தன்னை கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்துள்ளார் Yasmine.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் முகத்திலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட Yasmine உட்கார்ந்திருப்பதையும், அவருக்கு பொலிசார் முதலுதவி செய்வதையும் காணலாம்.
அவருக்கு அருகிலேயே அவரைக் குத்திய Angelaவையும் பொலிசார் பிடித்து கைவிலங்கிடுவதையும் காணமுடிகிறது.
சற்று நேரத்தில் பொலிசார் Angelaவை பொலிஸ் காரில் ஏற்றிவிட்டு, Yasmineஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இறங்குகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், Yasmine Jackson, மைக்கேல் ஜாக்சனின் தந்தையின் ரகசிய காதலியாகிய, Cheryle Terrellக்கு பிறந்த பெண்ணின் மகள்.
இதற்கிடையில், Yasmineஐ தாக்கிய Angela மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.