அம்பாறையில் கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து! அம்பாறை, இறக்காமம் பிரதான வீதியில் வரிப்பத்தான்சேனை பாலத்திற்கு அருகில் இன்று மதியம் வீதியால் சென்று கொண்டிருந்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் சாரதி பலத்த காயங்களுக்கு மத்தியில் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்தச் சம்பவம் இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தமன போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேற்கொண்டு வருகின்றனர்.