கொரோனா ஊரடங்கில் வேலை இல்லாமல் இருந்த தமிழ் சின்னத்திரை நடிகர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் ஐந்தாவது பிளாக்115-வது தெருவில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அங்கு சென்ற போலீஸார் வீட்டின் கதவை உடைத்தபோது, சடலமாக அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.  மேலும் படுக்கை அறையில் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலமும், மற்றொரு அறையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சடலமும் இருந்த நிலையில் இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீஸார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிறகு அவர்களது வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டில் கிடந்த சின்னத்திர்ரை அடையாள அட்டையில் ஸ்ரீதர், ஜெய கல்யாணி ஆகிய இருவரது பெயர்களும் இருந்துள்ளன. 7 வருடங்களாக அந்த வீட்டில் வசித்து வந்த இந்த இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்றும், கொரோனா காரணமாக ஷூட்டிங்குகள் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளன என்பதால், வாய்ப்புகள் சரிவர கிடைக்காமல் வறுமையில் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.