அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தின் நடுவே மேலும் ஒரு கருப்பின இளைஞர்_கொலை


அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் மேலும் ஒரு கருப்பின இளைஞர் பொலிஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ராய்ஷார்டு புரூக்ஸ் (Rayshard Brooks) எனும் 27 வயது இளைஞர் வெண்டி துரித உணவகம் முன்பு, பார்க்கிங் பகுதியில் காரில் அமர்ந்தவாரே தூங்கியுள்ளார்.
இதனால் பாதை தடைபட்டதாக அங்கிருந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த பொலிஸார் மது போதையில் இருந்த புரூக்சை கைது செய்ய முயன்றனர்.

அதற்கு உடன்பட மறுத்த அவர் பொலிஸார் வைத்திருந்த டேசர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றுள்ளார்.
இந்நிலையில், பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே ஜார்ஜ் பிளாய்டு படுகொலையால் வெடித்த போராட்டங்களே இன்னும் அடங்காத நிலையில், மற்றொரு கருப்பின இளைஞர் கொல்லப்பட்டதால் அட்லாண்டாவில் போராட்டம் வெடித்துள்ளது.

இதனிடையே இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று அட்லாண்டா நகரின் பொலிஸ் தலைமை அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இளைஞரை சுட்டுக் கொன்ற பொலிஸ் அதிகாரியும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.