இறுதியாக வழங்கப்பட்ட மின் பட்டியலே சரியானது. இரண்டு மாத பட்டியலையும் சேர்த்து 60 வீத கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. கட்டணத்தை தவணை முறையில் செலுத்தலாம். எந்தவொரு வீட்டிலும் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெளிவுபடுத்தியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கும் போது;


கொரோனா பரவல் காரணமாக சில சிக்கல் காணப்பட்டன. இறுதியாக வழங்கப்பட்ட மின்சார கட்டணத்துக்கான பட்டியலே சரியானது. மின்சார பாவனையாளர்களுக்கான 30 சதவீத சலுகை அவ்வாறே வழங்கப்பட்டுள்ளது. 2 மாதங்களிற்கான மின்சார பட்டியல் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதால் 60 சதவீத சலுகை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதத்தின் பின் வீட்டின் அனைத்து அங்கத்தவர்களும் வீட்டில் இருந்ததால் மின் பாவனை அதிகரித்துள்ளது. என்றாலும் பெப்ரவரி மாதம் பெற்றுக்கொண்டிருந்த மின் கட்டண பட்டியலுக்கு நிகரான- அதைவிட அதிகரிக்காத மின் கட்டண பட்யலே பாவனையார்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.அந்தக் கட்டணத்தை பலதவணைகளில் செலுத்த முடியும். எந்தவொரு வீட்டிலும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.