நயினை நாகபூசணி அம்மன் திருவிழா கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி..! அன்னதானமும் நிறுத்தப்பட்டது..


யாழ் “நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இம்மாதம் 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, தொடர்ந்து 18 நாட்கள் இடம்பெறவுள்ளது.

அதன்போது நயினாதீவு பகுதியிலுள்ள 30 அடியவர்கள் மட்டும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதேவேளை, மகோற்சவ காலத்தில் அன்னதானம் வழங்குவதற்கும் சுகாதாரப் பிரிவினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களில் இருந்து எவரும் ஆலய உற்சவத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அத்தோடு, யாழ் மாவட்டத்தில் இருப்பவர்களும் கலந்துகொள்ள முடியாது.
இதனைக் கருத்திற்கொண்டு இம்முறை நயினாதீவு ஆலய உற்சவத்திற்கு வெளி இடங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ள பட்டுள்ளனர்

தேர், சப்பற உற்சவங்கள் எதுவும் இடம்பெறமாட்டாது. ஆலய உற்சவங்கள் அனைத்தும் உள்வீதி உடனேயே நிறைவுபெறவுள்ளது”

என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாள க.மகேசன் தெரிவித்தார் இன்று நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய திருவிழா தொடபாக முன்னேற்பாடு கூட்டம் நேற்று(10) நடைபெற்றது
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.