அரசாங்கம் தேவையற்ற வகையில் தலையிடுவது சிறியளவிலான வியாபாரத் துறைகளின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமையக் கூடும்.


அதனால் - அரசாங்கம் செய்ய வேண்டியது, வசதிகளை வழங்கி அபிவிருத்திக்கு உதவுவி, சிறு வியாபார துறையினரின் சுதந்திரமான முன்னேற்றத்திற்கு இடமளிக்க வேண்டியதே ஆகும் என்று நான் நேற்று குறிப்பிட்டேன்.
அழகுக் கலை மற்றும் சிகையலங்கார துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நான் இதனை தெரிவித்தேன்.
அழகுக் கலை, சிகையலங்கார துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் தொழிற்திறனை மேம்படுத்துவதும், நிதி வசதிகளை வழங்குவதும், வர்த்தக மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் நான் குறிப்பிட்டேன்.
அனேகமானவர்களின் வேண்டுகோளின் பேரில் தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியை அழகுக் கலை துறைக்கு பெற்றுக்கொடுப்பதற்கும் நேற்று நான் இணங்கினேன்.
அவ்வாறு செய்வது - அவர்களைக் கடப்பாடுகளுக்கு உட்படுத்துவதற்காக அன்றி, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பங்களிப்பதற்காக மட்டுமே ஆகும் என்றும் நான் குறிப்பிட்டேன்.
சிறிய, நடுத்தர மற்றும் பாரியளவிலான சுமார் 90, 000 அழகுக்கலை நிலையங்கள் நாட்டில் உள்ளன. நான்கரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சுமார் 15 லட்சம் குடும்பங்கள் தங்கியுள்ளன.
அழகுக்கலையை ஒரு வாழ்க்கைத் தொழிலாகச் சிறப்பாகப் பேணுவதற்குத் தேவையான பயிற்சிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் நாம் விரிவாக கலந்துரையாடினோம்.
தேசிய தொழிற்தகைமைகள் பாடநெறியின் (NVQ) 05, 06 மற்றும் 07 ஆகிய கட்டங்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும் நான் பணிப்புரை விடுத்தேன்.
தமது தொழிற்துறையில் இருக்கும் பிரச்சினைகள் குறித்த நான் தெளிவுடன் இருப்பதாலேயே தம்மை அழைத்து நான் கலந்துரையாடியதாக - அழகுக்கலை துறையினர் நேற்று எனக்குத் தமது பாராட்டுகளையைம் தெரிவித்தனர்.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, எனது செயலாளர் கலாநிதி பி. பீ. ஜயசுந்தர உள்ளிட்ட அமைச்சுக்களின் செயாலாளர்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அனுஷ்க குணசிங்க மற்றும் அழகுக்கலை, சிகையலங்கார துறை முன்னோடிகள் சிலரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
கோட்டாபய ராஜபக்‌ஷ