சமூகவலைத்தளமே நேற்று பரபரப்பான விடயம் என்றால் அது வனிதாவின் திருமணம் தான்.
ஏற்கனவே இரு முறை திருமணமாகி விவாகரத்தான நிலையில் நேற்று வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை கரம்பிடித்தார்.
அவரது பிள்ளைகள் முன்னர் குடும்ப நண்பர்கள், உறவுகள் சூழ கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது.
வீட்டிலேயே மிகவும் பிரம்மாண்டமான முறையில் செட் அமைக்கப்பட்டிருந்தது, மகள் ஜோவிகா அழைத்து வரும் போதே கண்கலங்கிய படியே வனிதா வந்தார்.
பின்னர் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர், அதன் பின்னர் நடந்த பார்ட்டியில் பீட்டர் பால் நடனமாடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில், மிகவும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து கணவர் ஆடும் காட்சிகளை ரசித்துக் கொண்டிருக்கிறார் வனிதா.