யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இந்திய பிரஜை கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் யாழ்.இந்திய துணை துாதரகத்தில் பணியாற்றிய இரு அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளான இந்திய பிரஜையை கொழும்புக்கு அழைத்து சென்ற அதிகாரி மற்றும் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய பிரஜையின் மரண சான்றிதழ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவருமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 
இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு PCR பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.