ஜூன் மாதம் 29 ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறை நிறைவு

ஜூலை 6ம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

ஜூன் மாதம் 29 ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறை நிறைவடைவதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நான்கு கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதற்கமைய, முதற்கட்டமாக ஜூலை 6 ஆம் திகதி 5, 11, 13 ஆம் ஆண்டு மாணவர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

பாடசாலை ஆரம்பிக்கப்படும் ஒழுங்கு

ஜூன் 29 - ஜூலை 03 : அதிபர், ஆசிரியர், கல்விசாரா ஊழியர் பாடசாலை திட்டமிடல்
ஜூலை 06 :- தரம் 5, 11, 13 ஆரம்பம்
ஜூலை 20 :- தரம் 10, 12
ஜூலை 27 :- தரம் 3, 4, 6, 7 ,8, 9..
தரம் 1,2 இன்னும் தீர்மானிக்கப்படவில்லை...

இதேவேளை, உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் செப்டம்பர் 13 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அ​மைச்சர் குறிப்பிட்டார்.