போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முடக்கும் வகையிலேயே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


ஹிங்குரங்கொட தேர்தல் தொகுதியில் இன்னு இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மகளிர் அணியின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தனது ஆட்சிக்காலத்திலேயே போதைப்பொருள் ஒழிப்புச் செயற்பாடுகள் வலுவாக இடம்பெற்றன. அவற்றை தடுப்பதற்காகவே தான் மரண தண்டனையை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தேன்.
எனினும், போதைப்பொருள் வியாபாரிகளே அதற்கு எதிராக நீதிமன்றம்​ சென்றிருந்தனர். அவ்வாறான சூழ்நிலைக்கு முகம்கொடுத்த முதலாவது ஜனாதிபதியாக தானே இருந்துள்ளேன்.
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்ததால் சர்வதேச போதைப்பொருள் விற்பனையாளர்கள் தன்னை பகிரங்கமாக இழிவுபடுத்த சதி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மாகதுரே மதூஷ் போன்ற பாதாள குழுவின் முக்கிய உறுப்பினர்களை கைது செய்தமையால் தன்னை கொலைச் செய்வதற்கான பாதாள குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இன்றும் தொடர்கின்றன.
எவ்வாறாயினும், எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் போதைப்பொருள் வியாபாரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்றுவேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.