ஆயுதத்தில் தான் நம்பிக்கை, ஆயுதம் தான் தமிழருக்கு விடிவு தரும் என்று நம்புவீர்களாயின் எனக்கு எதிராக வாக்களித்து என்னைத் தோற்கடியுங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயுதம் ஏந்திப் போராடாத நான் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களது பெயரையும், தியாகத்தையும் விற்று, வாக்குக் கேட்டுப் பிழைப்பது தான் ஆயுதப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது.
அதை நான் ஒரு போதும் செய்ததில்லை. எப்போதும் செய்யவும் மாட்டேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.