முதலிரவில் மனைவியை கொலை செய்துவிட்டு, புதுமாப்பிள்ளையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டம் சோமஞ்சேரியை சேர்ந்த நீதிவாசனுக்கும், சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதனிடையே நேற்று முதலிரவு அறையிலிருந்து புதுமாப்பிள்ளை அவசர அவசரமாக வெளியே ஓடியதையடுத்து உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, புதுப்பெண் சந்தியா கடப்பாரையால் தலையில் தாக்கப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் புதுமாப்பிள்ளை நீதிவாசனை தேடி வந்தனர். இதனிடையே அவரும் அப்பகுதியிலிருந்த வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முதலிரவில் மணப்பெண் கொல்லப்பட்டது ஏன்? அவரை கொலை செய்த புது மாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டதன் பின்னணி என்ன என்பன குறித்து திருவள்ளூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.