இந்தியா, மலேஷியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை அச்சுறுத்தி வரும் சீன ராணுவத்தை கட்டுப்படுத்த, உலகளவில் இருக்கும் தனது படைகளை ஒன்று திரட்ட அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.


பிரஸ்ஸல்ஸ் போரம் 2020' என்ற மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மைக் பாம்பியோ பேசியதாவது: சில இடங்களில் அமெரிக்க படை பலத்தை குறைக்கவும், சீன ராணுவத்தினால், அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்தியா, மலேஷியா, வியட்னாம், இந்தோனேஷியா மற்றும் தென் சீன கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்க, அப்பகுதிகளுக்கு அமெரிக்க ராணுவத்தை அனுப்பி, அப்பகுதிகளை பலப்படுத்தவும் திட்டமிட்டு வருவதாகத் தெரிவத்தார்.

இதனால், அமெரிக்க படைபலம் குறைக்கப்படும் நாடுகள், தங்களுக்கான பாதுகாப்பை தாங்களே வலுப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது தான், புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பகுதிகளில், சீன ராணுவத்தை எதிர்கொள்ள அங்கு படைபலத்தை கூட்ட முடியும். இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் முழு ஆலோசனைகளை மேற்கொள்வோம் என்றும் அவர் கூறினார்.