கேகாலை மத்திய சந்தை கட்டிடத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த தீ பரவலானது சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் தீயினை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மக்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலும், தீ பரவல் குறித்து தீயணைப்பு படைப்பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்ததகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.