லண்டனில் மாடல் ஒருவரை 21 மணி நேரம் பிளாட்டில் அடைத்துவைத்து கொடூரமான முறையில் முன்னாள் சிறைக்கைதி இளைஞர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த பிப்ரவரி மாதம் பெயிலில் வெளிவந்த கைதி ஒருவர் சமூக வலைதளங்கள் மூலம் தனது முன்னாள் காதலியை பின் தொடர்ந்து பழிவாங்கத் துடித்துள்ளார். இதனை அறிந்த அந்த 33 வயது மார்த்தா என்பவர், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக மீண்டும் காவல்துறையினரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து மீண்டும் 32 வயதான குட்வின் என்கிற அந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு மார்த்தா என்கிற இப்பெண்ணை குட்வின் 21 மணி நேரம் பிளாட்டில் அடைத்துவைத்து முக எலும்புகளை அடித்து உடைத்து நொறுக்கியிருக்கிறார்.