சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று தலைதூக்கியதையடுத்து, தலைநகர் பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் வூஹான் நகரில்தான் முதன்முதலாக பரவியது.


கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைமேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய் தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாக கட்டுக்குள் வந்தது.
அங்கு இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சீனாவில் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று தலைதூக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையானது மக்கள் மத்தியில் பீதியை தோற்றுவித்துள்ளது.