காணாமல் போன நிலையில் 8 தினங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட பெண் ஒருவரின் மரணம் தொடர்பில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த மே மாதம் 30 ஆம் திகதி மீகஹாதென்னை, போத்தலாவ கங்கையில் 49 வயதான ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் காணாமல்போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இவரது மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த களுத்துறை பொலிஸ் வலய தீர்க்கப்படாத குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவு பொலிஸார், அப் பெண்ணின் கள்ளக் காதலன் என நம்பப்படும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
மேற்படி சந்தேக நபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்றும் இராணுவ சேவையிலிருந்து தப்பிச் சென்ற வந்த சந்தேக நபர் 36 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் தெரிய வந்துள்ளது.

மின்சார வயர் ஒன்றை பயன்படுத்தியே குறித்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது

இதனையடுத்து சந்தேக நபரை கைதுசெய்த மீகஹாதென்னை பொலிஸார் கைதானவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டருகின்றனர்.