2020. 06. 12, வெள்ளிக்கிழமை, முதல் வணக்க ஆலயங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன:
2020. 06. 10 அன்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவிப்பின்படி 

—> ஒரு வணக்க ஆலயத்தின் நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 50 பேர்களைத் தாண்டக்கூடாது.
—> சாதரண சூழலில் - 50 பேர்களுக்கு உட்பட்ட பக்தர்களை மட்டுமே உள்ளடக்கக்கூடிய ஒரு வணக்க ஆலயத்தில் - தற்போதைய சூழலில் நடைபெறும் ஒரு நிகழ்வில், அந்த தொகையிலும் பாதி அளவு தொகையான பக்தர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
இந்த அனுமதிகளுக்கு உட்பட்டு ஆலயங்களில் நிகழ்வுகளை நடத்தும் போது - கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்காக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றியே நடத்து வேண்டும்.