சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக, நடிகை ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் சோயிக் சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடத்திட போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பு மட்டுமின்றி பிசினஸ் செய்வதிலும் ஆர்வம் காட்டியுள்ளார். அவர் சொந்தமாக விவித்ரஜ் ரியாலிடிக்ஸ் என்னும் ஒரு நிறுவனத்தையும் மேலும் 2 நிறுவனங்களையும் தொடங்கி நடத்தி இருக்கிறார்.


இதில் விவித்ரஜ் ரியாலிட்டி நிறுவனத்தை 2019-ம் ஆண்டு நடிகை ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சோயிக் சக்ரபோர்த்தி ஆகியோருடன் தொடங்கி இருக்கிறார். ஆனால் மொத்த முதலீடையும் சுஷாந்த் சிங் மட்டுமே செய்ததாகவும் ரியா மற்றும் சோயிக் இருவரும் எந்த முதலீடையும் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் சோயிக்கை பார்ட்னராக சேர்த்துக்கொள்ளலாம் என சுஷாந்தை, ரியா தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், இதனால் சுஷாந்த் ரியாவின் சகோதரனை பார்ட்னராக சேர்த்ததாகவும் இந்த விஷயம் சுஷாந்த் குடும்பத்தினருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் சுஷாந்த் நிறுவனம் தொடர்பான விவரங்களை போலீசாரிடம் ரியா தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் ரியாவிடம் விசாரணை நடத்திட போலீசார் முடிவு செய்துள்ளனாராம். இதேபோல அவரது சகோதரர் சோயிப் சக்ரவர்த்தியிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள போலீசார், இதுதொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.