மனித உரிமைகளுக்கு எதிராகவும், உலக வர்த்தகத்திற்கு ஆபத்தானதாகவும் சீனா இருப்பதாக குற்றம்சாட்டி, எட்டு நாடுகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் புதிய கூட்டணி அமைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆட்டி படைத்து வரும் நிலையில், வர்த்தக ஆக்கிரமிப்பு, எல்லைப் பிரச்னை உள்ளிட்ட அத்துமீறல்களில் சீனா ஈடுபட்டு வருவது உலக நாடுகளை எரிச்சலடையச் செய்துள்ளது.

இதன் மூலம் கொரோனா சூழலை சீனா பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறதோ என்ற சந்தேகம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவை கட்டுப்படுத்தவும்,அதன் சர்வாதிகாரப் போக்கை தடுத்து நிறுத்தவும் மேற்கத்திய நாடுகள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட 8 நாடுகள் இணைந்து புதிய கூட்டணி அமைத்துள்ளன.
நியூ இன்டர் பார்லிமென்ட்டரி அல்லயன்ஸ்' என்ற இந்த அமைப்பில் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, ஸ்வீடன், நார்வே ஆகிய எட்டு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற எம்.பி.க்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இவர்கள் சீனாவின் சர்வாதிகார இலக்குகளுக்கு முட்டுக்கட்டைப் போடப்போவதாக அறிவித்துள்ளனர்.