கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நுழைந்து 79 இலட்ச பணத்தை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற வைத்தியரொருவர் பொலிஸாரால் செவ்வாய் கிழமை(9) அன்று கைது செய்யப்பட்டார்.


ஊதியப் பிரிவின் அதிகாரியொருவருக்கு போலித் துப்பாக்கியைக் காண்பித்து, 79 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டதாக, தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் லயனல் முஹந்திரம் குறிப்பிட்டார்.
குறித்த பணத்தை வைத்தியசாலை ஊழியர்களின் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்காக இந்த நிதி கொண்டுவரப்பட்டிருந்தது.
பணத்தை கொள்ளையிட்டு தப்பி சென்று வீதியால் ஓடியவரை துரத்தி பிடித்த பெண் பொலிஸ் அதிகாரி, தமது தனிப்பட்ட தேவை நிமிர்த்தம் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி தமது குழந்தையுடன் சென்று கொண்டிருந்த போது வழியில் கைத்துப்பாக்கியுடன்வீதியின் நடுவே ஓடிவந்த ஒரு சந்தேக நபரைப் பின்தொடர்ந்து முயன்ற மாத்தறை பொலீஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரியான OIC, வருணி கேசலா போகாவட்டா அவரை மடக்கி பிடித்தார். அவரிடமிருந்து வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் 79இலட்சம் கைப்பற்றப்பட்டது.