மதுரையில் உயிருக்கு போராடிய சிறுமியை காப்பாற்ற 63 பேர் ரத்ததானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவாரூரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் காவியா. இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிறுமியின் தந்தை இதுதொடர்பாக முயற்சி செய்துள்ளார்.

அப்போது வில்லாபுரம் பகுதியில் வசிக்கும் நபர்கள் உடனே ரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்தனர். இந்த முகாமில் மொத்தமாக 63 பேர் ரத்ததானம் செய்துள்ளனர். இதனை அடுத்து சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்றுள்ளது. மகளின் உயிரை காப்பாற்ற ரத்ததானம் செய்து உதவிய 63 பேருக்கும் சிறுமியின் தந்தை ரவி தனது நன்றியை தெரிவித்தார்.