யாழ்.இணுவில், ஏழாலை பகுதிகளில் 13 குடும்பங்களை சேர்ந்த 60ற்கு மேற்பட்டோருக்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல். 13 பேரின் முதற்கட்ட பரிசோதனை முடிவு வெளியானது..


யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரியுடன் தொடர்புகளை பேணியதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்றில்லை. என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், 13 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களில் 13 பேருக்கு இன்று பரிசோதனை இடம்பெற்றது. இதன்போது ஒருவருக்கும் தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 குடும்பங்களை சேர்ந்த 60ற்கு மேற்பட்டவர்களும் 14 நாட்கள் கட்டாய தினமைப்படுத்தலில் வைக்கப்படுவர் என அவர் மேலும் கூறியுள்ளார்.