தோனி நடிகர் சுஷாந்த் சிங் ஆறு வருடங்களாக காதலித்து வந்த காதலிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட எம்எஸ் தோனி அண்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படத்தில் இவர் தோனி மாதிரி நடித்து அசத்தியதால் இவரது இந்த திரைப்படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது என்றே கூறலாம்.

இந்நிலையில் 34 வயதாகும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் பாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். திரைப் பிரபலங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கான காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதற்கு ஒரு பதிலும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதாவது சுஷாந்த் சிங்கும் நடிகை அங்கிதா லோகண்டே என்பவரும் சீரியலில் ஒன்றாக இணைந்து நடித்து வந்தனர். இவர்கள் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறியது. இதைத் தொடர்ந்து இருவரும் ஆறு வருடங்களாக ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

இதனையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட க ரு த் து வே று பா டு காரணமாக கடந்த 2016 ஆம் தங்கள் உறவை முறித்துக் கொண்டு பிரேக்கப் செய்து பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகை அங்கிதாவிற்கு , விக்கி ஜெயின் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கீதா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தனது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இரசிகர்களுக்கு வெளியீட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

தான் கா த லி த் து வந்த அங்கீதா வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதால் என்னமோ சுஷாந்த் சிங் இந்த விபரீத முடிவை எடுத்து இருப்பாரோ என பலராலும் சந்தேகிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் திரையுலகில் பெரு ம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது