டிக்டாக் உட்பட 59 சீன ஆப்களை இந்திய அரசு தடை விதிக்கவிருப்பதாக இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவிப்பறிக்கை வெளியிட்டுள்ளது.


சமீப காலமாக இந்திய- சீன எல்லையான லடாக் பகுதியில் பெரும் போர்ப் பதற்றம் நிலவிவரும் நிலையில், பொதுமக்களின் தகவல்களை அணுகுவதைத் தடுப்பதற்கான நடைமுறை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் 2009-ன் படி இந்திய சட்டப் பிரிவு எண் 69A-ன் கீழ், டிக்டாக், யூசி பிரவுசர், ஷேர் இட, ஹெலோ ஆப் உள்ளிட்ட 59 ஆப்கள் தடை செய்யப்படுவதாக அதிரடி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிநபர் தரவுகளின் பாதுகாப்பு மற்றும் சில பயன்பாடுகளின் செயல்பாடு தொடர்பான தனி நபர் உரிமைக்கான ஆபத்துகள் உள்ளிட்டவை பற்றி இந்திய குடிமகன்களிடம் இருந்து இந்திய தொழில்நுட்பத் துறைக்கு வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் தொழில்நுட்பத் துறையின் அறிவிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 2 பில்லியன் மக்கள் டிக்டாக் செயலியை தரவிறக்கம் பண்ணியிருந்த நிலையில், இந்தியாவைப் பொருத்தவரை 611 மில்லியன் பேர் டிக்டாக்கினை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் டிக்டாக்கை பெரிய அளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ள நிலையில் டிக்டாக் தடை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

தடை செய்யப்படும் ஆப்களின் விபரம்.

TikTok, Shareit, UC Browser, Kwai, Baidu map, APUS Browser, ROMWE, Club Factory, Clean Master Cheetah Mobile, Wonder Camera, Photo Wonder, QQ Player, We Meet, Sweet Selfie, Baidu Translate, Vmate, QQ International, QQ Security Center, QQ Launcher, U Video, V fly Status Video, Newsdog, Beutry Plus, WeChat, UC News, Shein, Clash of Kings, DU battery saver, Helo, Likee, YouCam makeup, Mi Community, CM Browers, Virus Cleaner, QQ Mail, Weibo, Xender, WeSync, ES File Explorer, Viva Video QU Video Inc, Meitu, Vigo Video, New Video Status, DU Recorder, Vault- Hide, QQ Music, QQ Newsfeed, Bigo Live, SelfieCity, Mail Master, Parallel Space, Mi Video Call Xiaomi, Cache Cleaner DU App studio, DU Cleaner, DU Browser,Hago Play With New Friends,Cam Scanner, Mobile Legends, DU Privacy