நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தில் கப்பல் சின்னத்தில் போட்டியிடும் கருணா அம்மானின் 35 அடி நீளமான பதாகை இனந்தெரியாதவர்களால் எரியூட்டப்பட்டுள்ளன.
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ள நிலையில் “எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்” என்ற வாசகத்துடன் கப்பல் சின்னத்துடன் கல்முனை நகர பகுதியிலுள்ள மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தன.
இத்துண்டுப்பிரசுரங்களை பாண்டிருப்பு சந்தை, தாளவட்டுவான் சந்தி, நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் பிரசாரம் மேற்கொள்வதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில எரியூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.