தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு ஜூன் 29ஆம் திகதி தொடக்கமே அனுமதி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
ஒரு வகுப்பறையில் 100 மாணவர்கள் என்ற கட்டுப்பாட்டுடன் கல்வி செயற்பாடுகளை ஜூன் 15 முதல் நடத்த அனுமதி தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களத்தால் இன்று மாலை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கும் அனுமதி ஜூன் 15 முதல் அல்ல என்றும் ஜூன் 29ஆம் திகதி தொடக்கமாகும் என்றும் அரச தகவல் திணைக்களம் இன்றிரவு அறிவித்துள்ளது.