24.06.2020 பரிசோதனையில் இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
132 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:
* போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - ஒருவர் .
* பொது வைத்தியசாலை வவுனியா - ஒருவர்.
* மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 30 பேர்.
* தனிமைப்படுத்தல் மையம் இயக்கச்சி - 57 பேர்.( மூவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஐவருக்கு மீள் பரிசோதனை செய்யப்படவேண்டும் )
* இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையம் முல்லைத்தீவு – 43 பேர்.( மூவருக்கும் மீள்பரிசோதனை செய்யப்பட வேண்டும் )