2020ம் ஆண்டிற்கான சூரிய கிரகணம் ஜூன் 21ம் திகதி இந்தியா, இலங்கை உட்பட சில நாடுகளில் ஏற்பட உள்ளது. இந்த கிரகணத்திற்கு நெருப்பு வளைய சூர்ய கிரகணம் என பெயர் வைக்கப் பட்டுள்ளது. இது இந்தியாவில் 6 மணி நேரங்கள் உள்ள நிலையில் இலங்கையில் 3 மணி நேரம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியரும் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு இயக்குனருமான சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


இது குறித்து மேலும் தெரிவித்துள்ள சந்தன ஜயரத்ன நெருப்பு வளைய சூர்ய கிரகணமானது இலங்கையில் 10.30க்கு தொடங்கி 1.30 மணியளவில் நீங்கும். இந்த சூர்ய கிரகணமானது நாடு முழுவதும் சில நிமிட வித்தியாசத்தில் தென்படும் என தெரிவித்துள்ளதுடன் இலங்கையில் அடுத்த கிரகணம் இன்னும் இரண்டு வருடங்களின் பின் அதாவது 2022 அக்டோபர் மாதம் 22ம் திகதி தென்படும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் 21ம் திகதி தென்படும் சூர்ய கிரகணத்தை வெறும் கண்ணால் அல்லது சாதாரண கண்ணாடிகள், சன்கிளாஸ்கள், தொலை நோக்கிகள், கமராக்கள், போன்றவற்றால் பார்க்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். சிறப்பு பாதுகாப்பு கண்ணாடிகள், வடிப்பான்கள், வெல்டர்களின் கண்ணாடிகள், பின்ஹோல் கேமராக்கள் மூலம் பார்க்கும் படி தெரிவிக்கப் பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் இந்த சூர்ய கிரகணத்தை பார்த்தால் குருட்டு தன்மை அல்லது நிரந்தர பார்வை கோளாறு ஏற்படும் என கூறிப்பிடுள்ள சந்தன ஜயவர்தன கதிர்வீச்சு அதிகம் இருப்பதால் மக்கள் அவதானமாக இருக்கும் படி தெரிவித்துள்ளார்..!!