ஆம், நான் கொரோனாவை விடவும் ஆபத்தானவன். இலங்கையின் கொரோனா பலி எண்ணிக்கையை விட, புலிகள் அமைப்பில் இருந்த போது ஆணையிறவில் வைத்து ஒரே இரவில் 2000 – 3000 இராணுவ வீரர்களை கொன்றேன் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.


கொரோனாவை விட கருணா ஆபத்தானவர் என்று காரைதீவு பிரதேச சபை தலைவர் தெரிவித்த கருத்துக்கே மேற்கண்டவாறு கருணா பதிலளித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு இதனை அவர் தெரிவித்தார்.
மேலும், தேசிய பட்டியல் ஊடாக மீண்டும் என்னை நாடாளுமன்றுக்கு தெரிவு செய்ய பிரதமர் விடுத்த அழைப்பை நிராகரித்தேன்.
மக்களின் ஆணையுடன் மீண்டும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் வருவேன் என்று அவருக்கு அறிவித்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.