பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சுஷாந்த் ராஜ்புத். இவர் எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் தோனியாக நடித்திருந்தார். இவரிடம் திஷா சலியான் என்பவர் மேலாளராக ப ணியாற்றி வந்தார். திஷா சலியான் சுஷாந்த் ராஜ்புத் மட்டுமின்றி ஐஸ்வர்யா ராய், பார்த்தி ஷர்மா, ரியா சக்கரவர்த்தி ஆகிய நடிகர்களுக்கும் மேலாளராக ப ணியாற்றி வந்தார்.


இவருக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்தது. திடீரென்று நேற்று முன்தினம் இரவு தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 14-வது மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இவருடைய மறைவிற்கு சுஷாந்த் ராஜ்புத் உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் இர ங்கல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்  காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் திஷா சலியானின் வருங்கால கணவர் அவருடன் இருந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் ஏதேனும் பிரச்சனைகள் இருந்திருக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் காவல்துறையினர் அவரிடம்  விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திஷா சலியானின் த ற்கொ லைக்கு பிரபல நடிகர் சுஷாந்த் ராஜ்புத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் வருண் உட்பட பலரும் திஷா சலியானின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.