ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு நகரில் அடுத்தடுத்து பலர் மயங்கி விழுந்ததை அடுத்து சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை எனும் சூழலில், இவர்கள் மயங்கி விழுந்து எபிலெப்சி நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிலரது உடல்நிலை சீராகி வீடு திரும்பியுள்ள நிலையில், பலரும் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவக் குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்து வருவதுடன் அவர்க…
நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் என்பதால் மக்கள் எந்த வேளையிலும் தயாராக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகமொன்றுக்கு இன்று -06- பகல் வழங்கிய நேர்காணலில் இதனைக் கூறியுள்ளார். மேலும் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை சேர்த்துவைத்திருக்கும் வரை ஊரடங்குச் சட்டம் காத்திருக்காது என்றும், ஆகவே எப்போதும் தயாராக இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றானது திவுலுப்பிட்டிய, கம்பஹா பகுதியில் மாத்திரம் மட்டுப்பட்டிருக்கும் அல்லது அந்த எல்லையை தாண்டி அருகிலுள்ள பிரதேசங்களு…
அவசியமற்ற அனைத்து பயணங்களையும், உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள். அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் கூட்டங்களையும் இடைநிறுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறுகையில், நாட்டில் புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கபட்டுள்ளது. மினுவங்கொடவில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையின் 150 தொழிலாளர்களில் அறுபத்தொன்பது பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இதனை…
1500 மாணவ மாணவியர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுத்த நடவடிக்கை !! திவுலப்பிட்டிய பிரதேசத்தில் 1500 மாணவ மாணவியர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணின் புதல்வி கல்வி கற்ற பாடசாலை மாணவர்களே இவ்வாறு சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மணிமேகலைக் காப்பியத்தில்' கூறுவதைப்போல சுடுவோர், இடுவோர், தாழ்வையில் அடைப்போர், தாழியிற் கவிழ்ப்போர் என்ற நான்கு வகையான புதை நடைமுறைகளை இங்கே காண முடிகிறது. கீழடி ஆய்வு பல ஆச்சர்யங்களை தொடர்ந்து தந்துகொண்டே இருக்கிறது. நான்கு, ஐந்து, 6-ம் கட்டம் என தமிழக தொல்லியல்துறை கீழடியின் முக்கியத்துவம் கருதி தொடர்ந்து விரிவான அகழாய்வு செய்து வருகின்றது. கடந்த பிப்ரவரி 19-ம் தேதி கீழடி 6-ம் கட்ட அகழாய்வுப் பணியை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். எப்போதும் இல்லாத அளவில் கீழடி 6-ம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் என்று ந…
கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு, துபையில் இருந்து 191 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 174 பயணிகள் இருந்தனர் என்றும், 10 கைக்குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 5 விமானப் பணியாளர்கள் இருந்தனர் என்றும் இந்திய விமான போக்குவரத்துத்துறை ஊடகப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கோழிக்கோடு விமான நிலையம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது குறித்து என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. கோழிக்கோடு…
2020 பொதுத் தேர்தல்: நாடளாவிய ரீதியிலான பெறுபேறுகளும் ஆசனப்பகிர்வும் பொதுஜன பெரமுன - SLPP - 6,853,693 (59.09%) 145 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி - SJB - 2,771,984 (23.90%) 54 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்தி - NPP / JJB - 4,45,958 (3.84%) 3 ஆசனங்கள் இலங்கை தமிழரசு கட்சி - ITAK - 3,27,168 (2.82%) 10 ஆசனங்கள் ஐக்கிய தேசிய கட்சி - UNP - 249,435 (2.15%) 1 ஆசனம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - AITC - 67,766 (0.58%) - 2 ஆசனங்கள் OPPP - 67,758 (0.58%) - 1 ஆசனம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - TMVP - 67,692 (0.58%) 1 ஆசனம் இலங்கை சுதந்திர கட்சி - SLFP 66,57…
தேவை நாடும் மகளிர் WOMEN IN NEED ( WIN ) மேற்சொல்லப்பட்ட இந்த அமைப்பானது முதன்முதலாக 1987ம் ஆண்டு ஒரு சில பெண்களடங்கிய சிறு குழுவினரால் ஸ்தாபிக்கப்பட்டது.குடும்ப அல்லது இல்லத்து வன்முறைகளால் பாதிப்படைந்த,(Domestic Violence) தீர்வில்லாத பிரச்சினைகளால் சோர்வடைந்து, பாதிப்படைந்த பெண்களுக்கு, நிவாரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், ஆரம்பத்தில் இந்த அமைப்பு குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டும் சேவையிலீடுபட்டது. நாளடைவில் குடும்ப வன்முறை, பால் நிலை அடிப்படை வன்முறை, பல தரப்பட்ட பிரச்சினைகளாலும் பாதிப்படைந்த பெண்கள், சிறுவர்கள்…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கடற்படைச் சிப்பாய் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை கண்டறியப்பட்டுள்ளது. அவர் தற்போது விடத்தற்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். கடமைக்காக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த கற்படைச் சிப்பாய் ஒருவர், கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சேர்க்கப்பட்டு இருதய துடிப்பு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டிருந்தார். அவருடன் தொடர்புடைய சிலருக்கு கோரோனா இருந்தமை தொடர்பில் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் அவருக்கு சந்தே…
இலங்கையில் தனிப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதங்கள் வரலாறு காணாத வகையில் குறைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாகவே இந்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதில் மக்கள் வங்கியே மிக குறைந்த வட்டி வீதத்தில் கடன்களை வழங்க முன்வந்துள்ளது. 10 வருடங்கள் வரை மீள் செலுத்தும் காலங்களை கொண்ட கடன்களுக்கு 9% வட்டியில் இன்று முதல் கடன்கள் வழங்கப்படுமென அறிவித்துள்ளனர் மக்கள் வங்கியினர். ஏற்கனவே வேறு வங்கியில் கடன் எடுத்தவர்கள் அந்த வங்கியுடன் தொடர்புகொண்டு தங்கள் கடன்களை மீள் நிரப்பிக்கொள்ள…