தடுப்பூசிபோட்டுக்கொண்டவர்கள் மோசமான கொவிட் பாதிப்பிற்கு உள்ளாகலாம், மரணமும் சாத்தியம்-இலங்கை மருத்துவ சங்கம் 

முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களில்சிறிய எண்ணிக்கையிலானவர்கள்

கடுமையான நோய்களுக்கு உள்ளாகுவதுடன், இறக்க நேரிடலாம் என தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) முழுமையாக தடுப்பூசி போடப்பட்டாலும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமானவர்களுக்கு மூன்றாவது

டோஷை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராயவேண்டும்என கேட்டுக்கொண்டுள்ளது.

பஹ்ரைனில் இருந்து பெறப்பட்ட ஆய்வுகளில், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டாலும், தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடும்போது  இறப்பு விகிதம் சற்றே அதிகரித்துள்ளது என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான வைத்தியர். பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் (SJPU) நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் ஆய்வகத்தின் ஆய்வுகளுக்கு அமைய அஸ்ட்ராஜெனாக்கா தடுப்பூசி கொடுக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குகின்றன, சினோபார்ம் அவ்வாறு செயற்படவில்லை

சினோபார்ம் தடுப்பூசியின் இரு டோஸ்களும் கொடுக்கப்பட்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கும் மூன்றாவது டோஸாக அஸ்ட்ராஜெனேகா, பைஷ ர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான வைத்தியர். பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.