அமைச்சர் சமல் ராஜபக்ஸவிற்கு கொரோனா உறுதி...

அமைச்சர் சமல் ராஜபக்ஸவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சகோதர இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி ,கடந்த நாட்களில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிப் பழகிவந்த சமல் ராஜபக்ஸ தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அதனனைத் தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ,தற்போது அமைச்சர் சமல் ராஜபக்ஸ தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.