அரச துறைகளில் எவ்வித நியமனங்களும் வழங்கப்படக் கூடாது - நிதி அமைச்சு மேலதிக கொடுப்பனவும் இரத்து....!! 
 அரச துறை, அரச சார்பு துறைகளில் எவ்வித நியமனங்களும் வழங்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தும் நிதிய மைச்சின் அவசர சுற்றுநிருபம் நிதி அமைச்சினால் சகல அமைச்சுக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இதற்கமைய நாட்டின் நிதிநிலை சீராகும் வரை உடனடியாக சகல வகை அரச நியமனங்களும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதே போன்று அரச உத்தியோகத்தர்களு க்கு சம்பளத்திற்கு மேலதிகமாக வழங்கப் படும் அனைத்து வகையான மேலதிக கொடுப்பனவுகளும் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளன.
 உயர்நிலை அதிகாரிகளுக்கு வழங்கப்ப டும் எரிபொருள் கொடுப்பனவுகள் நிறுத் தி வைக்கப்பபட்டுள்ளது. வேலைக்கு சமு கமளிக்கும் உண்மையான நாட்களால் பிரித்து கொடுப்பனவு மேற்கொள்ளப்ப டும்.