இலங்கையில் கொரோனா தொற்றாளர்களில் 95.8 சதவீதமானோருக்கு டெல்டா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ,ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை துறையால் எடுக்கப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்வில் இது தெரி யவந்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிக்கா மாளவிகே மற்றும் வைத்தியர் சந்திம ஜீவந்தர ஆகியோ ரால் இந்த பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பிலும் டெல்டா மற்றும் அல்பா வைரஸ் திரிபுகள் பரவலாக பரவி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இரு தடுப்பூசியை செலுத்திக்கொண்டோரையும் இந்த டெல்டா மாறுபாடு விட்டு வைக்காது என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.