இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக சினோபார்ம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, இதுவரையில் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற சினோபார்ம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரித்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், நாளொன்றில் இலங்கைக்கு சீனாவினால் வழங்கப்பட்ட அதிகளவான தடுப்பூசி தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.