இலங்கையானது கொரோனா தொற்றினால் இவ்வருடம் 1,600 பில்லியன் ரூபா வருமானத்தை இழந்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

நிதி மசோதா மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு மசோதாவின் கீழ் விதிக்கப்பட்ட விதிமுறைகள் மீதான விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய முடக்கல் அமல்படுத்தப்பட்டதிலிருந்து மறைமுக வரி வருவாய் 70% பதிவு செய்யப்பட்டுள்ளது.

இம்முடக்கலினால் உள்நாட்டு வருவாய் துறை, சுங்க மற்றும் கலால் துறை ஆகியவற்றின் வருவாயானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை செலவீனங்களுடன் ஒப்பிடும் போது மொத்த வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலைமை தொற்று நோயினால் ஏற்பட்ட ஒன்றல்ல. 

ஏனெனில் இலங்கையின் அரச செலவுகள் பல நூற்றாண்டுகளாக வருமானத்தை விட அதிகமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.