டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதனால் வீட்டினுள்ளும் முகக் கவசம் அணிவதை கட்டாயப்படுத்தி கொள்ளுமாறு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

வீட்டில் ஒருவர் கழிவறை மற்றும் குளியலறையைப் பயன்படுத்தி 15 நிமிடங்களுக்குப் பின்பு இன்னொருவர் பயன்படுத்தினால், மற்றொரு நபருக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வைரஸ் தொற்றானது 15 வினாடிகளுக்குள் இன்னொருவருக்கு பரவக் கூடியது. எனவே ஒரு குறுகிய நேரத்திற்காவது முகக் கவசத்தை அகற்றுவது, வைரஸ் தொற்றுக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போது இந்தியா மற்றும் அமெரிக்காவில் சிறுவர்களுக்கு இடையே டெல்டா வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. எனவே உங்கள் குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ளவும், வெளியாட்களை வீட்டிற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.