லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் லாப் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதன்படி, லாப் 12.5 கிலோ எரிவாயுவின் விலை 363 ரூபாவினாலும், 5 கிலோவின் விலை 145 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அதற்கமைய, 12.5 கிலோ லாப் எரிவாயுவின் விலை 1,856 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயுவின் விலை 743 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளன.