தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை மிக துரிதமாக அதிகரிப்பதன் காரணமாக கண்டி போதனா வைத்தியசாலையில் பிரேதங்களை களஞ்சியப்படுத்தலில் அசௌகரியங்கள் மற்றும் பிரேத அறையின் குளிரூட்டி பற்றாக்குறை நிலைமைகள் கடந்த சில தினங்களாக நிலவி வருகின்றது.

இந்த நிலையை கருத்தில் கொண்டு இதற்கான ஒரு மாற்று வழியாக பிரத்தியோகமாக குளிரூட்டி கொள்கலன் ஒன்றினை பொருத்துவதின் ஊடாக கண்டி போதனா வைத்தியசாலையில் பிரேதங்களை சீராகவும் சிறப்பாகவும்  முகாமைத்துவப் படுத்த முடியும் என்று  முன்னாள் கண்டி போதன வைத்தியசாலையின் பனிப்பாளரும் தற்போதைய சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளருமான வைத்தியர் திரு  ரத்னாயக்க அவர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு அங்கத்தவரும் கண்டி ஜனாசா  சங்க   உறுப்பினருமான எஸ் எம்  ரஸ்வி அவர்களிடம் தெரிவித்து கொள்கலன் ஒன்றை பெற்றுத் தருமாறு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கண்டி CONMIX நிறுவனத்தின் பணிப்பாளர் அல்ஹாஜ் அfப்சல் மரிக்கார் அவர்களின் முன்னெடுப்பில் Aitken Spence நிறுவனத்தின் அனுசரணையில் பிரேதங்களை களஞ்சிய படுத்துவதற்காக வேண்டி கண்டி போதனா வைத்தியசாலைக்கு ஒரு குளிரூட்டி கொள்கலன் (Freezer Container) வழங்கப்பட்டு இன்று வைத்தியசாலை வளாகத்தில் பொருத்தப்பட்டது. 

இந்த முக்கியமான சமூக பிரச்சனைக்கு உடனடி தீர்வை பெற்றுத்தந்த இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் திரு  ரத்னாயக்க  மற்றும் தற்போதைய கண்டி வைத்தியசாலை பணிப்பாளர் எஸ் ஏ ஏ என் ஜயசேகர, உதவி பணிப்பாளர் திருமதி இரேஷா பெர்ணான்டொ, கண்டி போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் திரு எம் சிவசுப்பிரமணியம் அதேபோல் வைத்தியசாலை அபிவிருத்தி குழு அங்கத்தவர்  எஸ் எம் ரிஸ்வி மற்றும் சமூக சேவையாளர் அல்ஹாஜ் அப்சல் மரிக்கார் ஆகியோருக்கும்  இதற்கான முழு அனுசரணையை வழங்கிய Aitken Spence நிறுவனத்திற்கும் கண்டி வாழ் சமூகம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வசீர் முக்தார்

கண்டி மாவட்ட மக்கள் பிரதிநிதி.