தியாகங்களை செய்ய வேண்டும் என மக்களிடமே கோரிக்கை விடுப்பதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித உரிமையும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி ,அண்மையில் நாட்டு மக்களுக்கான உரையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இணையவழி கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அதற்கமைய ,கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த நிபுணர்கள்கள் குழுவை நியமிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளமையும் ரணில் விக்ரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் ,இந்த கோரிக்கையை இலங்கையை தவிர்ந்த ஏனைய நாடுகள் நிறைவேற்றியுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த நிபுணர்கள் குழுவை நியமிப்பதாக அரசாங்கம் உறுதிமொழியை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.