முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தன்னோடு நெருங்கிய தொடர்பை பேணிய அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கும் இன்று (13) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.