லாப் கேஸ் விலை அதிகரிப்புக்கு நிகராக லிட்ரோ கேஸ் விலையை அதிகரிக்குமாறு லிட்ரோ கேஸ் நிறுவனம் கோரி இருக்கின்றது.

அதன் பிரகாரம் விரைவில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளவேண்டி வரும் இல்லாவிட்டால் வழக்கு விசாரணைக்கு செல்லவேண்டிவரும் என நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர் குஷான் குணவர்த்தன தெரிவித்துள்ளார்

.அதன்படி லாப் காஸ் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதன் பிரகாரம் லிட்ரோ காஸ் 12.5கிலோ கிராம் சிலிண்டர் 363 ரூபாவினாலும் 5 கிலோ கிராம் கொண்ட சிலிண்டரின் விலையை 145 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாகவும் இன்னும் சில தினங்களில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர் குஷான் குணவர்த்தன தெரிவித்துள்ளார்