கல்வி அமைச்சு உட்பட பல அமைச்சுக்களின் அமைச்சர்களை மாற்றும் அமைச்சரவை மாற்றம் ஒன்றுக்கு அரசு தயாராவதாக டெய்லி எப்டி (Daily FT) செய்தி வெளியிட்டுள்ளது. இதன் படி, கல்வி, ஊடகம், சக்தி, சுற்றுலா, வெளிவிவகாரம் முதலான அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படவுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் புதிய வெளிவிவகார அமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராக தற்போதுள்ள தினேஸ் குணவவர்தன உயர் கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது. 

றமேஸ் பதிரன புதிய சுகாதார அமைச்சராகவும், ஊடக அமைச்சராக டலஸ் அலகபெருமயும், பவித்ரா வன்னியாரச்சி, எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய கல்வி அமைச்சராக பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்படவுள்ளதாகவும் அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நேற்று சில அமைச்சுக்கள் தொடர்பாக இணக்கம் காணப்பட்டதாகவும் இன்றும் மற்றும் சில தினங்களிலும் இது உறுதியாகும் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.