நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாரம்மல பிஹல்பொல சந்தியில் சீமெந்து விற்பனை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சீமெந்து ஏற்றிய லொரியில் இருந்தே இவ்வாறு சீமெந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு சீமெந்து பொதி 1300 ரூபாவுக்கு விற்பனை செய்யபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த விடயம் நாரம்மல பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் பொலிசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளார் எனவும் அதன் பின்னர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நுகர்வோர் அதிகார சபையிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.